காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் தென் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்போது சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleபரீட்சைக்கு சென்ற மாணவி மீது அசிட் வீச முயன்ற இளைஞர்! மூவர் வைத்தியசாலையில்
Next article38 வருடத்தின் பின்னர் இலங்கையில் தாயை கண்டுபிடித்த பெண்! பதிவான நெகிழ்ச்சி சம்பவம்