38 வருடத்தின் பின்னர் இலங்கையில் தாயை கண்டுபிடித்த பெண்! பதிவான நெகிழ்ச்சி சம்பவம்

38 வருட பாச போராட்டத்தின் பின்னர் தாயின் அன்பை தேடி இலங்கை வந்த நெதர்லாந்து பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தாயொருவருக்கு பிறந்த பெண் குழந்தையை 38 ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் நெதர்லாந்து தம்பதியருக்கு தத்துக்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தனது பிறப்பு தொடர்பில் அறிந்த பெண் தனது தாயை தேடும் முயற்சியில் பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதுடன்,தாயின் விபரங்களை திரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய, தனது தாயின் புகைப்படம், தனது பிறந்த திகதி போன்ற சில விபரங்களை வைத்து பிறந்த வைத்தியசாலையை கண்டுப்பிடித்து தனது தாயை கண்டுப்பிடித்துள்ளார்.

Previous articleகாலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு
Next articleகட்டுமாணத்துறையை சார்ந்தவர்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க