கட்டுமாணத்துறையை சார்ந்தவர்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இலங்கையின் கட்டுமாணத் துறையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ளவர்களுக்கான நிலுவையில் உள்ள கட்டணங்களை விரைவாக செலுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கான பணம் பகுதி பகுதியாக வழங்கப்படும் எனவும் வீடமைப்புத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இதனைக் கூறியுள்ளார்.மேலும் கட்டுமாணத் துறையில் உள்ளவர்களை நாம் பாதுகாக்கவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பாரிய நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கட்டுமாணத் துறையில் உள்ளவர்களை பற்றி கவனத்தில் கொள்ளள வேண்டியது அரசின் பொறுப்பாகும் அவர்களுக்கு உரிய கொடுப்பனவினை கொடுக்க வேண்டும் .நாட்டில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடிகளால் 13 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலார்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் . அத்தோடு அவர்கள் இத் துறையின் விட்டு வேறு துறைகளை நாடிச் செல்வதுடன் வேறு துறைகளில் முதலீடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுமானத் துறையில் உள்ளவர்களை பாதுகக்க வேண்டியது எமது கடமை எம்மால் இயன்றவரை அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Previous article38 வருடத்தின் பின்னர் இலங்கையில் தாயை கண்டுபிடித்த பெண்! பதிவான நெகிழ்ச்சி சம்பவம்
Next articleஇலங்கையில் இருந்து தமிழகம் சென்ற நபர் உயிரிழப்பு!