தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் இ.ராமதாஸ் காலமானார்.

தமிழ் சினிமாவின் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ.ராமதாஸ் காலமானார்.

இவர் நேற்றிரவு (24) இரவு MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இறந்தவரின் இறுதி சடங்குகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை முனுசாமி சாலை, கே. கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

நடிகர் இ.ராமதாஸ் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Previous articleமருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்!
Next articleயாழில் பட்டப்பகலில் சினிமா பாணியில் இடம்பெற்ற சம்பவம் ! நால்வர் வைத்திய சாலையில் அனுமதி !