காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட யாழ் பல்கலை மாணவன்!

யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் ஒருவன் தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

யாழ் பல்கலைக்கழக மாணவிகள் வீதியால் செல்லும் வேளை  சில இளைஞர்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புகளை பலபடுத்தினர் .

அதே சமயம் பல்கலைக்கழக விடுதியினை வீதியில் நின்ற சில இளைஞர்கள் நோட்டமிட்டபடி நின்றுள்ளனர். இதனை அவதானித்தத பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்களின் கைத்தொலைபேசிகளை பரிசோதித்த வேளை அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளமை பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

அது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட வேளை தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவருடனான உறவு முறிந்ததை அடுத்து நண்பர்களுக்கு தான் இதனை பகிர்ந்ததாகவும் கூறியுள்ளார்.குறித்த இளைஞனை பொலிசார் கடுமையாக எச்சரித்ததுடன் புகைப்படங்களை அழிக்குபடி செய்து அவர்களை கைது செய்தனர்.பின்னர் அவர்களுகளை பிணையில் விடுவிக்க அனுமதியும் வழங்கியுள்ளனர்

Previous articleயாழில் பட்டப்பகலில் சினிமா பாணியில் இடம்பெற்ற சம்பவம் ! நால்வர் வைத்திய சாலையில் அனுமதி !
Next articleஇ.போ.ச டிப்போவின் பஸ் சாரதியினை குத்திக் கொன்ற நடத்துனர்!