அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரச சேவையில் இடமாற்றம் செய்ய முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் இடமாற்றம் செய்ய வேண்டுமானால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன்தான் அவற்றைச் செய்ய முடியும்.

தேர்தல் தொடர்பாக அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடியும் வரை இந்த சட்ட ஏற்பாடுகள் பின்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமட்டக்களப்பில் வீதியில் கோர விபத்து! ஒருவர் பலி;பலர் படுகாயம்
Next articleயாழ் போதனா வைத்தியசாலையில் கறுப்புப் பட்டி போராட்டம்