யாழில் பட்டப்பகலில் சினிமா பாணியில் இடம்பெற்ற சம்பவம் ! நால்வர் வைத்திய சாலையில் அனுமதி !

யாழில் திரைப்பட பாணியில் நான்கு பேர் விபத்துக்குள்ளாக்கப்பட்டு பின்னர் கும்பல் ஒன்றின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதான வீதியில் சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது பட்டா ரக வாகனத்தில் பயணித்த மற்றுமொரு குழுவினர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதன் பின்னரே அவர் வாளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரண்டு வாள் வெட்டுக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleதமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் இ.ராமதாஸ் காலமானார்.
Next articleகாதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட யாழ் பல்கலை மாணவன்!