நாட்டின்  9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில்  100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பலத்த இடி மின்னலுடன் பெய்யலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது.

அதற்க்கிணங்க மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும் அதே நேரம் பலத்த மின்னலுக்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளை பலத்த காற்றும் வீசக்கூடும் அகவே மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

Previous articleஇலங்கை வந்திருக்கும் இந்தியாவின் பிரபல வில்லன் நடிகர்
Next articleஇலங்கையின் இசைக்கலைஞர் துலீகா கோதாகொட காலமானார்!