இலங்கையில் கையடக்க தொலைபேசிகளில் அறிமுகமாகும் சாரதி அனுமதி அட்டை!

கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுனர் உரிமத்தினை வழங்கும் முறை ஒன்றினை இலங்கையில் தயாரித்து வருவதாக இலங்கை  மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளது.

தயாரிக்கப்பட்டு வரும் அதே வேளை அதனை நடைமுறைக்கு கொண்டு வர கலந்துரையாடல்களும் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக  அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார்.

இவ் நடைமுறை அமுலுக்கு வந்ததும் சாரதி அனுமதிப்பத்திர அட்டை தேவை இல்லை தொலைபேசிகளிலே பயன்படுத்திக் கொள்ள இயலும் எனவும் அவ்வாறு சாரதி அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் பெற்றுக் கொள்ள இயலும் எனவும் குறிப்பிடப்படுள்ளது

Previous articleதலைமறைவாக இருந்த மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளுக்கு பின்னர் கைது
Next articleயாழில் வீணை சின்னத்தில் மொட்டு போட்டி ; பசில் ராஜபக்ச