பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்!

பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவி உயிரிழந்த சம்வம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (24) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

முதலாம் வகுப்பில் பயிலும் 6 வயதினை உடைய அளுத்கம கம்பீரிகஸ்வெவ எனும் பிரதேசத்தினை உடைய மஜித் பைஸ் பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் இருந்து பேருந்தில் வீடு திரும்பிய வேளை இறங்க வேண்டிய இடம் வந்ததும் குறித்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கிய போது சாரதி பேருந்தினை இயக்கியதால் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. சாரதியின் கவனக் குறைவால் மாணவியின் உயிர் பறி போனது. குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் கைது செய்யப்படுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பில்  பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஜி.எல்.சி. சிறிகாந்த விடுத்துள்ள பணிப்புரைக்கு அமைய இலங்கை போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஅனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம் – நிதி இராஜாங்க அமைச்சர்
Next articleகம்பளையில் வங்கி ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை – நால்வர் கைவரிசை