அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம் – நிதி இராஜாங்க அமைச்சர்

அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் வேதனம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிறைவேற்று அதிகாரம் இல்லாத அரச பணியாளர்களுக்கு 25 ஆம் திகதியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணியாளர்களுக்கு 25 அல்லது 26 ஆம் திகதிகளிலும் வேதனம் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

திறைசேரியில் நிதியின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்;பிட்டிருந்தார்.

இதேவேளை அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்கக்கூட நிதியில்லாத நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவதென்றால் நிதியை தேடுவது கடினமாக இருக்கும் என்று திறைசேரியின் செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவட்டி விகிதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
Next articleபாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்!