யாழில் இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்

யாழ்.காரைநகர் – கொழும்பு இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தை வழி மறித்த கும்பல் ஒன்று பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது மேலும் காரைநகரிலிருந்து கொழும்பு செல்வதற்காக யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி நோக்கி பேருந்து புறப்பட்ட நிலையில் காரைநகர் – பீச் றோட்டில் குறிப்பிட்ட வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் காயமடைந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்த நிலையில் காரைநகர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

குறித்த பேருந்தின் மீது தாக்குதல் நடாத்தபடுவது மூன்றாவது தடவையாகும்