பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் நாட்டில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொருளாதார பிரச்சினைகளினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் இந்தத் தகவலை தெளிவுபடுத்தியுள்ளார்.

பல்வேறு மனநோய்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்கள் பணப்பிரச்சினை காரணமாக மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியுள்ளதால் மனநோய்கள் அதிகரித்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளதாகவும் நிபுணர் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் விரக்தியடைந்த இளைஞர்கள் மத்தியில் மனநோய்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடு செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகும் இளைஞர்களுக்கு மனநலப் பிரச்னைகள் உருவாகியுள்ளதாகவும், சமூகத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தி பல இளைஞர்கள் இந்த மன அழுத்தத்தை போக்குவதாகவும் அவர் கூறினார்.

மேலும் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மன உளைச்சல் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், கல்வி நடவடிக்கைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குறிப்பிட்டார்.

கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வியின் காரணமாக மொபைல் போன்களுக்கு அடிமையான பல குழந்தைகள் பல்வேறு மனநல கோளாறுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

Previous articleயாழில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்ற கடை உரிமையாளருக்கு 5 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் தண்டம் ! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு !
Next articleகுழந்தையை வீட்டில் தானே பிரசவித்து காட்டுப்பகுதியில் தூக்கி எறிந்த 15 வயது சிறுமி கைது !