வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு !

வவுனியா – செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (25-01-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரங்கெட்கம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நந்தன கிரிசாந்த என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஉயர்தரப் பரீட்சையின் காரணமாக மின்வெட்டு குறித்து வெளியான தகவல் !
Next articleதிருகோணமலையில் பசியால் உயிரிழந்த சிறுவன் ! கண்ணீருடன் தாயார் வெளியிட்ட தகவல் !