எரிபொருள் தட்டுப்பாட்டால் துவிச்சக்கரவண்டியில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தனது அன்றாடப் பணிகளை சைக்கிளிலேயே மேற்கொண்டு வருகிறார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக எரிபொருளைப் பெறுவதில் பெரும் இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது க்யூஆர் சிஸ்டம் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே எரிபொருளை சேமிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.