வெளிநாடு செல்வதற்காக இந்தியாவில் தங்கியிருந்த யாழ்.நபர் உயிரிழப்பு!

இந்தியாவின் தமிழகத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்த 42 வயதுடைய றமணன் என்ற நபரே வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

இந் நிலையில் அவசர நோயாளர் காவு வண்டிமூலம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த குறித்த நபர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டிற்கு செல்வதற்காக சென்று இந்தியாவின் தமிழகத்தில் தங்கியிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்ற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleயாழினை சேர்ந்த தாயும் மகளும் பிரான்சில் கொலை! ஒருவர் கைது !
Next articleயாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய நபர்! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை !