தொடர்ந்து இரு நாட்களுக்கு பலத்த மழை!

வங்காள விரிகுடாவில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் குறிப்பாக வியாழன் (26-01-2023) மற்றும் வெள்ளிக்கிழமை (27-01-2023) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

மேலும், 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைந்து , ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் மழை உடனான காலநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.