பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் குறைந்துள்ளன!

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் குறைந்துள்ளன!

பு றக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 130 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலை 100 ரூபாவாகும்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், உருளைக்கிழங்கு மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 80 முதல் 100 ரூபா வரை குறைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Previous articleதொடர்ந்து இரு நாட்களுக்கு பலத்த மழை!
Next articleஅஞ்சல் மூல வாக்களிப்பு தினம் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பு