ஏலத்தில் விடப்படும் ஜெயலலிதாவின் சொத்துக்கள்!

இந்தியாவின் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளான வைரம், தங்கம், விலையுயர்ந்த புடவைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை, பொது ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது இந்நிலையில்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அத்துடன் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்த பல கோடி பெறுமதியான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்படி, 468 வகையான வைரம், ரூபி, மரகதம், முத்து, ரத்தினம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்கநகைகள், 700 கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ.11,344 மதிப்பிலான விலை உயர்ந்த புடவைகள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள்,

அத்துடன் 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சிப் பெட்டிகள், 8 சி.வி.ஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள், 1 வீடியோ கேமரா, 4 வீடியோ பிளேயர்கள், 1,040 வீடியோ கேசட்கள், 24 டேப் ரெக்கார்டர்கள், 3 இரும்பு லாக்கர்கள், 33 தொலைபேசிகள் உள்ளிடவை பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. 

Previous articleமருந்து தட்டுப்பாடு குறித்து WHO காரியாலயத்தில் முறைப்பாடு
Next articleகோழிப் பண்ணை ஒன்றில் வளர்ந்து வந்த 240 திருடப்பட்டுள்ளன.