விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!

சென்ற 2021ஆம்  ஆண்டு பசறை 13 ஆம் கட்டை பகுதியில் மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியாகினர். அதில் குறித்த சிறுமியின் தாய் தந்தை இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த பெற்றோரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

   பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் பயிலும் மாணவி நோவா யூஜீனியா புலமைப் பரிசில் பரீட்சையில்  174 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார்.

இம்மாணவியே அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார் இம் ,மாணவியே பதுளை மாவட்டத்தில், பசறை கல்வி வலயத்தில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று சிறப்பு சித்தியடைந்துள்ளார்.

Previous articleஇலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பொதுநலவாய செயலாளர் நாயகம்
Next articleமின் வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவித்தல்!