பணத்திற்காக மகளை விற்பனை செய்த தாய்!

இலங்கை பாணந்துறை பிரதேசத்தில் பணத்திற்காக 15 வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் ஒன்று  நிகழ்ந்துள்ளது

சிறுமி ஒருவரை பணத்திற்காக வயதானவர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி விசாரணை மேற்கொண்டதில் தொழில் அதிபர் ஒருவர் சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுமியை பாலியல் தொழிலுக்காக சிறுமியை வாங்கி விற்ற சம்பவம் தெரிய வந்துள்ளது

இச்சம்பவத்தில் சிறுமியின் தாய் மற்றும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரும் கைதாக்கியுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் கூறியுள்ளனர் .மேலும் இந்த சம்பவத்தில் பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரக்கன பிரதேசங்களைச் சேர்ந்த  42, 45, 54 மற்றும் 84 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிறுமி பொலிசாரால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சிறுமியை தாயிடம் பணம் கொடுத்து வாங்கி விற்பனை செய்த தொழிலதிபரான பெண் தலைமறைவான நிலையில் அவரை கண்டு பிடிக்க பொலிசார் விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர்

Previous articleஇன்றைய ராசிபலன்27.01.2023
Next articleயாழ் கோப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி உட்பட 11பேர் கைது!