பரீட்சைகள் நிறைவடையும் மின்சார தடையை இடைநிறுத்த முடியாது! – இ.மி.ச

உயர்தர பரிசோதனைகள் நிறைவடையும் வரை மின்வெட்டை அமுல்படுத்த முடியாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் அதற்கான செலவை ஈடுகட்ட நிதி வழங்க வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியின்றி மின்வெட்டை நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைகள் முடியும் வரை மின்தடையை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று நாடு முழுவதும் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது.

இந்த நிலையில், சட்டக் கடிதம் அனுப்பியுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, உறுதிமொழியை மீறி மின்தடை அமுல்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் தலைவர், இந்த காலப்பகுதியில் மின்வெட்டை நிறுத்த வேண்டுமாயின் மேலதிகமாக 4.1 பில்லியன் ரூபா தேவைப்படும் என சுட்டிக்காட்டினார்.