75ஆவது சுதந்திர தின விழா: முகநூலில் அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவர் கைது

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நபர் ஒருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நபர் ஒருவர் தனது முகநூலில் பல்வேறு கருத்துக்களை (பதிவுகளை) பதிவிட்டதாக வந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான மேற்படி கருத்துகளை (பதிவுகளை) தனது முகநூலில் பதிர்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, அவ்வாறான கருத்துக்களை தெரிவித்த சந்தேகநபரின் முகநூல் கணக்கை சோதனை செய்து விரிவான அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர், மஹரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நுகேகொட கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous articleவீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலி
Next articleமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!