விபச்சாரி போல் நாடகமாடி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

கொழும்பில் மனைவியை விபச்சாரிபோல் காண்பித்து, நாடகமாடி பல்வேறு நபர்களை ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கணவன் பொலிஸாரால் கைது! அத்துடன் அவருக்கு துணையாக இருந்த மனைவி மற்றும் ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களால் தங்கச் சங்கிலியொன்றும், தொலைபேசியும் கொள்ளையடிக்கபட்டதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் மனைவியை இரவு நேரங்களில்  எகொட – உயன பிரதான வீதிக்கு அருகில் மனைவியை நிறுத்தி அந்நேரத்தில் மனைவியை நாடி வரும் நபர்களை பாழடைந்த இடங்களிற்கு அழைத்து சென்று கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் உள்ள நகை மற்றும் பொருட்களை பறிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது .

மேலும் கைதான கணவன் மனைவி மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த கணவனின் நண்பன் மூவரும் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது

Previous articleயாழில் இராணுவ வாகனம் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு!
Next articleஅரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!