அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!

அரசின் புதிய வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் கறுப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று கொழும்பு கோட்டையில் இருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபட்டது அத்துடன் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகள், துறைமுகம் ஆகிய பிரிவுகளில் ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என அனைத்து துறை சார்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே சமயம் புத்தளம் மற்றும் அனுராதபுரம் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது

Previous articleவிபச்சாரி போல் நாடகமாடி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!
Next articleயாழ் நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் தோன்றிய அதிசயம்!