யாழ் நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் தோன்றிய அதிசயம்!

யாழில் தீவிப் பகுதியில் அமைந்து அருள் பாலிக்கும்  நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது அண்மையில் ஆலய வளாகத்தினுள் ருகைக்கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று தானாகவே தோன்றியுள்ளது இச் சிலை பக்தர்களுக்கு ஆச்சர்யத்தையும் பக்தர்களுக்கு பர்வசத்தினையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் ஆதி காலத்தில் இருந்தே இந்த அம்மனை வழிபட்டு வருகின்றனர்.ஆலடி என ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இவ் ஆலயம் ஆரம்பத்தில் சிறிய அளவிலேயே இருந்துள்ளது அதன் பின்னர் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்ற நிலையில்

இக் கும்பாபிஷேத்திற்கான சிரமதான வேலைகளின் போதே அம்மன் வடிவில் நிலத்திலிருந்து தோன்றிய இச் சிலை மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது ஐந்து தலை பாம்பின் கீழ் காட்சியளிக்கும் இந்த அம்மன் சிலையை பார்ப்பதற்க்காக பக்தர்கள் உள்ளூரில் இருந்தும் வெளியூரில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளனர்.