வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரை அகற்ற வேண்டாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய மாநாயக்க தேரர்கள் 

நாட்டில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பௌத்தர்கள் வாழும்பகுதியாக வடக்கு, கிழக்கி உள்ளது இன் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க பௌத்த தலங்களை போர் நடைபெற்ற காலத்தில் இருந்து இன்று வரையும் பாதுகாத்து பராமரித்து வருவது பாதுகாப்பு படையினரே ஆகவே அவர்களை இந்த வழிபாட்டு தலங்களில் இருந்து பாதுகாப்பு படையினரை அப்புறப்படுத்த வேண்டாம் என மாநாயக்க தேரர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

கடிதம் மூலம் இக் கோரிக்கையினை ஜனாதிபதிக்கு விடுத்துள்ளனர் விகாரைகளை உயிர் தியாகம் செய்து பாதுகாத்தது பௌத்த மக்களே  வறிய மக்கள் பெரும்பாலும் விகாரைகளால் போஷிக்கப்பட்டனர்.மேலும்  வடக்கு, கிழக்கில் உள்ள விகாரைகளுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம்கள் அவற்றின் பாதுகாப்புக்காக இருப்பது மிகவும் நல்லது எனவும் மாநாயக்க தேரரர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.