யாழில் மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழில் ஒரு மாதத்திற்கு மேலாக மின் கட்டண நிலுவையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என யாழ் தலைமை பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்படும் அதே வேளை மீள் இணைப்பு கட்டணமாக 3 ஆயிரத்து 250 ரூபாய் அறவிடப்படும். அதனைவிட ஆறு மாத காலத்திற்கு மேல் மின் துண்டிப்பு செய்யப்படுவதோடு வாடிக்கையாளர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆகவே இதுவரை மின் கட்டண நிலுவையை செலுத்தாதவர்கள் விரைந்து செலுத்திக் கொள்ளுங்கள்.

Previous articleவடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரை அகற்ற வேண்டாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய மாநாயக்க தேரர்கள் 
Next articleஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீ விபத்தில் பலி! சந்தோஷத்தால் ஏற்பட்ட பெரும் சோகம் !