10வது மாடியில் இருந்து குதித்து தற்கைாலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம் நடிகர் டான்ஸர் ரமேஷ் !

டிக் டாக் உள்ளிட்ட தளங்களில் திறமையை வெளிப்படுத்தி பிரபலமான பலர் சினிமாவிலும் நுழைந்துள்ளனர். அப்படி நடனமாடி இணையத்தில் பிரபலமானவர் தான் டான்சர் ரமேஷ்.

கடந்த ஆண்டு தனது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்றும், உணவுக்கு கூட வழியின்றி இருப்பதாகவும் அவர் பேட்டி அளித்திருந்தார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது குழந்தையை வேலைக்கு அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.

எனக்கு நடனம் மட்டுமே தெரியும், வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கண்ணீருடன் பேசியது குறிப்பிடத்தக்கது. ஜீ தமிழின் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அதன் பிறகு தடுவு, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் இரண்டு மனைவிகளுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடன கலைஞர் ரமேஷ் திடீரென 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஇலங்கை மீனவர்கள் 5 பேர் மியன்மாரில் தடுத்து வைப்பு!
Next articleயாழில் பிறந்து முப்பது நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!