Home சர்வதேச செய்தி விக்கிலீக்ஸ் நிறுவனர் சவால்

விக்கிலீக்ஸ் நிறுவனர் சவால்

julian-assangeதகவல் அறியும் உரிமைக்காக போராடி வருகின்ற விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே, சணடைவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுவீடன் நாட்டவரான அசாஞ்சே கடந்த மூன்றரை வருடங்களாக (2012 ஜூன்) லண்டனிலுள்ள ஈகுவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இவருக்கு எதிராக, இரு பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளதாக தெரிவித்தே சுவீடன் அரசு, அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, தான் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை எனத் தெரிவிக்கும் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் வழியாக அமெரிக்காவின் இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்களை கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியிட்டமை தொடர்பில், சுவீடன் அரசு தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விடும் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதவிடத்தில், பிரித்தானிய பொலிஸாரிடம் தான் சரணடைய விரும்புவதாகவும், தனது கடவுச்சீட்டை வழங்க வேண்டும் எனவும், தன்னை கைது செய்வதற்கான எவ்வித முயற்சியிலும் ஈடுபடக் கூடாதெனவும் அவர் நிபந்தனைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

ஆயினும் ஈகுவடோர் அரசும், சுவீடன் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குறித்த பலாத்கார வழக்கு தொடர்பில், ஈகுவடோர் தூதரகத்தில் விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.julian assange