சுவிஸில் நடந்த கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகனும் மரணம்.!

சுவிட்சர்லாந்தின் Argive Canton இல் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்..

கடந்த 21ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் பேடன் மேற்கு வீதியில் மெர்சிடிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த தந்தை நேற்று உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். காரில் பயணித்த இரண்டு மகள்கள் மற்றும் தாயாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்திற்கு மது அல்லது போதைப்பொருள் தொடர்புபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பமே விபத்தில் சிக்கியுள்ளது.

செய்திகளின்படி, St.Gallen மாகாணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த சம்பவம் புலம்பெயர் தமிழர்களையும், ஈழத்தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.

Previous articleஇலங்கை தமிழர்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!
Next articleசுதந்திர தினம் அன்று மேற்கொள்ளப்பட இருக்கும் மாபெரும் பேரணி!