மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழப்பு!

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது..

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி நேற்றைய தினம் மின் கம்பியை இழுக்க முயன்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஹேகித்த என்பவரே இது தொடர்பில் மடக்குளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Next articleவரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள பாகிஸ்தான் ரூபாய்!