Home சினிமா ’பீப்’ பாடலுக்கு எதிராக போராடிய மாதர் சங்கம் இப்போது எங்கே ? டி.ராஜேந்தர் அதிரடி

’பீப்’ பாடலுக்கு எதிராக போராடிய மாதர் சங்கம் இப்போது எங்கே ? டி.ராஜேந்தர் அதிரடி

trajendar_002கள்ளக்குறிச்சி மாணவிகள் 3 பேர் மரணம் குறித்து போராடாமல் மாதர் சங்கத்தினர் எங்கே போனார்கள் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்து பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், சிம்பு மீதான பீப் பாடல் வழக்கு, சட்டரீதியாக ஜாமீனில் வெளிவரக் கூடிய வழக்கு தான் என்று உயர்நீதிமன்றம் வரை போராடி வென்றிருக்கிறேன்.

முதல் தகவல் அறிக்கையே தாக்கல் செய்ய முடியாத வழக்கு அது. நீதிமன்றத்துக்கே போக வேண்டாம் என்று இடைக்கால உத்தரவு வந்தால் என்ன செய்வது? ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

எதிலுமே ஒரு நோக்கம் வேண்டும். அந்த வழக்கைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு ஏன் அந்த வழக்கு அடங்கிப் போய்விட்டது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராடியவர்கள் எல்லாம் இன்று எங்கே போனார்கள்?

3 மாணவிகள் இறந்து போனார்களே அதற்கு அந்த மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அதை எல்லாம் ஏன் யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

டி.ராஜேந்தர் எதிலுமே ஒரு அறிவுபூர்வமாக சிந்திப்பேன். சில பேரைப் போல முக்காடுப் போட்டுக் கொண்டு எல்லாம் நீதிமன்றத்துக்கு செல்ல மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.