வெளிநாடுகளில் இலங்கை பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நிறுவனங்களிடம் வரி அறவிட வேண்டுகோள்!

ஏற்றுமதி நிறுவனங்கள் வரி செலுத்தாமல் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்திற்கு வரி அறவிடுவதற்கு தனிக்குழு வொன்றை அமைத்து அதற்க்கு தேவையான சட்ட மூலங்களை தயார் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுபவர்கள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் தாம் ஈட்டும் வருமானத்திற்கு வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன அத்துடன்  பல்வேறு வரி ஆலோசனை நிறுவனங்களும் ஆலோசகர்களும் வரி மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்ள போலியான அறிக்கைகளை தயாரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை பரிசீலித்து அதற்க்கு தேவையான கொள்கைகளை அவசரமாக தயாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleஅரசின் புதிய வரிச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் நாடு!
Next article2020ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வரிச்சலுகையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் – ஜனாதிபதி