ஜனக்க ரத்னாயக்கவை பதவி நீக்க தீர்மானம்

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்னநாயக்கவை நீக்குவதற்கு அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த குற்றப்பத்திரம் எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அவர், தன்னிச்சையான தமது தீர்மானங்களை எடுத்து வருகின்றார்.

தமது அரசியல் நோக்கங்களுக்காக, உயர் தர மாணவர்களது உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பதாகவும் வலுசக்தி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Previous articleபிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவரின் தங்க நகைகள் மாயம்!
Next articleஉள்ளூராட்சி தேர்தல் குறித்து வௌியான விசேட அறிக்கை!