இலங்கை நாடாளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்ததால் யாழ்.இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

இலங்கை நாடாளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (29-01-2023) மாலை நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரும் மற்றையவர் முஸ்லிம் இளைஞரும் ஆவார்.

மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பாராளுமன்ற மைதானத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லும் வீதியூடாக திவான்னா ஓயா பிரதேசத்திற்கு வந்து அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் இருந்து பாராளுமன்ற கட்டிடத்தை வீடியோ எடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலங்கம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Previous articleகாணி தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில் !
Next articleவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை ! நாளை முதல் நிலைமை மோசமாகும் !