Home கனேடிய செய்திகள் ஐ.டி கல்லூரி மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவன்: அதிரடியாக கைது செய்த பொலிசார்

ஐ.டி கல்லூரி மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவன்: அதிரடியாக கைது செய்த பொலிசார்

bath_video_002கனடாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள குளியலறையில் மாணவிகளின் நிர்வாண கோலத்தை வீடியோ எடுத்த மாணவர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Burnaby நகரில் BCIT என்ற தகவல் தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது.

இதே கல்லூரியில் Chieh-Sen Yang என்ற பெயருடைய 23 வயதான மாணவரும் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் கல்லூரி வளாகத்தில் உள்ள குளியல் அறையில் மாணவிகள் குளிப்பதை ரகசியமாக தனது கைப்பேசி கமெராவில் வீடியோ எடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதே மாதத்தில் மற்றொரு மாணவியை அதே மாணவர் நிர்வாண கோலத்தில் படம் பிடித்தாக வெளியான தகவலை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இரண்டாவது முறையாக இந்த அத்துமீறல் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவரை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாணவர் கைது பற்றிய செய்தி வெளியானதை தொடர்ந்து கல்லூரி தலைவரான Kathy Kinloch அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘இந்த சம்பவம் கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒழுங்கற்ற நடத்தையை நிர்வாகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு எச்சரிக்கைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், மாணவரை கைது செய்த பொலிசார் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவரை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளனர்.

கல்லூரி வளாகத்தில் தங்க கூடாது. வீடியோ மற்றும் படங்கள் எடுக்கக்கூடிய நவீன கருவிகளை தன்னுடன் வைத்திருக்க கூடாது மற்றும் ஒழுக்கங்களை கற்பிக்கும் உளவியல் ரீதியான ஆலோசனை வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவரை பொலிசார் விடுதலை செய்துள்ளனர்.