இலங்கையில் மிகப் பெரிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் கைது!

இலங்கையில் மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் விசேட அதிரடியாடையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பிரான்சில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ரூபன் என்பருடனும் தொடர்புகளை பேணியவர். அத்துடன் நாட்டில் பலருக்கும் போதைபொருள் வர்த்தகத்திலும் பாரிய உதவிகள் புரிந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலிற்கு இணங்க நேற்றைய தினம் மோதறையில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleகடலில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்!
Next articleகாய்ச்சலுக்கான மருந்து உட்கொள்வோருக்கான முக்கிய அறிவித்தல்!