காய்ச்சலுக்கான மருந்து உட்கொள்வோருக்கான முக்கிய அறிவித்தல்!

காய்ச்சலால் பாத்திக்கப்பட்டு மருந்து உட்க்கொள்வோருக்கான அவசர அறிவித்தல் ஒன்று

இந் நாட்களில் ஏற்படும் சதாரண காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் ஒன்றாக உள்ளது அகவே நோயின் நிலையினை தீர்மானிக்காமல் மருந்து உட்கொண்டால் பாரிய விளைவுகள் ஏற்ப்படும்.

அதே சமயம் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில்  32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 10 மாதங்களில் மட்டும் 20,334 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் இலங்கை தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

Previous articleஇலங்கையில் மிகப் பெரிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் கைது!
Next articleபுலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் ஜவானின் தந்தை காலமானார்