யாழில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்:மற்றொரு சிறுவன் மீட்பு..

யாழ்.வடமராட்சி கிழக்கு – மாமுனை கடலில் குளிக்க சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

காணாமல் போன சிறுவன் கிழக்கு நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீரில் மூழ்கிய மற்றொரு சிறுவன் மீட்கப்பட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

Previous articleகொழும்பில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
Next articleமகளுக்காக தாய் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல்!