இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!

இன்று (30) மற்றும் நாளை (31) மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களில் இருந்து, மின்சார உற்பத்திக்கு போதியளவு நீரை வெளியேற்ற நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளது.

நீரேந்து பகுதிகளில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதால், நீரை விடுவிக்க, குறித்த செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, இன்றும் மற்றும் நாளை தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Previous articleமகளுக்காக தாய் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல்!
Next articleவளிமண்டலவியல் திணைக்களத்திடமிருந்து மீனவர்களுக்கான எச்சரிக்கை