மக்களே அவதானம்! : இலங்கையில் வரலாறு காணாத வகையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் கடந்த சில தினங்களில் 4387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 32.5 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களில் மட்டும் 20334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும், இந்நாட்களில் பதிவாகும் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதால், நோயின் தன்மையை கண்டறியாமல் மருந்துகளை உட்கொள்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.