கொழும்பு பல்கலை மாணவி கொலையில் கைதான சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு !

கொழும்பு குதிரைப் பந்தயப் பாதையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவரைக் கொன்ற சந்தேக நபரின் கைது நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (ஜனவரி 30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவி பல்கலைக்கழக ஆண் நண்பரால் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Previous articleமாத்தறையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை !
Next articleமக்களே அவதானம்! : இலங்கையில் வரலாறு காணாத வகையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு