15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 வயது இளைஞன் கைது

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் இன்று (30.01.23) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கு தெரியவந்ததையடுத்து, இது குறித்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Previous articleபிக்பாஸ் ஜனனியா இது ? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
Next articleபேருந்தை சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்திற்குள்ளாகவிருந்த பேருந்து காப்பாற்றப்பட்டது !