மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாய் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த தாய் தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை வீட்டின் சில பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையுடன் அண்டை வீட்டுக்குத் தப்பிச் செல்வதற்கிருந்த கணவன் – மனைவி இருவரையும் காட்டு யானை வழிமறித்துள்ளது.
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தாய் பலமணிநேரம் போராடினார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் தீயை மூட்டி யானையை கடும் போராட்டத்திற்கு பின்னர் விரட்டி காயம் அடைந்த குழந்தை மற்றும் தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாயும் சேயும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.