யாழிலிருந்து ஆரம்பமாகும் ஆர்பாட்ட பேரணி: பெருகும் ஆதரவு !

எதிர்வரும் நான்காம் நாளை கரிநாளாக பிரகடனம் செய்து தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இன்று (30.01.2023) திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

போராட்டத்தின் இறுதி நாளில் வடக்கிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்புக்கு வரும் எழுச்சிப் பேரணியுடன் அம்பாறையிலிருந்து கண்டனப் பேரணி ஒன்று வந்தடையும்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

Previous articleகுழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி தன் உயிரை கொடுத்த இளம் தாய் ! நேர்ந்த விபரீதம் !
Next articleயாழ். பல்கலைக்கழக மாணவர்களை வீடியோ எடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் ! வெளியான காரணம் !