இலங்கையில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட இருக்கும் கஞ்சா!

நாட்டிற்கு தேவையான உள்நாட்டுக்கு மூலிகைகள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்யும் போது மூலிகைசார் கஞ்சாவையும் இறக்குமதிக்கு செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அதற்க்கு தேவையான அமைச்சரவை பத்திரம் விரைவில் தயார் செய்து முன்வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அத்துடன் மூலிகை செடிகளை நாட்டில் வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இத் திட்டம் அனுராதபுரம் உள்ளிட்ட பிரதேசங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் அத்தோடு இது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆயுர்வேத திணைக்களத்தின் மத்தியஸ்த்தினால் மேற்கொள்ளப்படும். அத்துடன் குறித்த செய்கைக்கு தேவையான காணிகளை வழங்கும் வேலைத்திட்டமும் விரைவில் முன்னெடுக்கப்படும்.

Previous articleஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் ரணில் விக்கிரமசிங்க
Next articleநாட்டின் கையடக்க தொலைபேசி வர்த்தம் சரிவடையும் அபாயம்!