அதிக ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்திருக்கும்இடம் எது தெரியுமா?

இலங்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஊழல் நிறைந்த நாடாக பதிவாகியுள்ளது இத் தகவலினை   2022 ஆம் ஆண்டு ஊழல் புலனாய்வு சுட்டெண் (CPI) தரவுகளை மேற்கோள்காட்டி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷன் வெளியிட்டுள்ளது.

அத்தோடு இலங்கை 2021 ஆம் ஆண்டில் இருந்து  2022 ஆம் ஆண்டு,வரை இலங்கையின் தரவரிசை ஒரு புள்ளியாக குறைவடைந்திருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

அத்தோடு ஊழல் புலனாய்வு சுட்டெண்ணுக்கு ஏற்ப , 180 நாடுகளில் 36 புள்ளிகளுடன் இலங்கை 101 ஆவது இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இக் கருத்துக்கணிப்பானது புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளின் கணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப , 100 புள்ளி ஊழல் அற்ற நாடாகவும், 0 புள்ளி மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் கொள்ளப்படுகின்றது

இந்த பட்டியலில், 90 புள்ளிகளுடன் டென்மார்க் முதல் இடத்தில் உள்ள அதேவேளை, 12 புள்ளிகளுடன் சோமாலியா இறுதி (180 ஆவது) இடத்திலும் உள்ளது.

Previous articleகல்வி பொ . த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்
Next articleஒரு நாள் சேவையில் கீழ் கடவுச் சீட்டு தயாரிப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!