ஒரு நாள் சேவையில் கீழ் கடவுச் சீட்டு தயாரிப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

இலங்கையின் தங்கலம பிரதேசத்தில் ஒரு நாள் கடவுச் சீட்டுக்களை தயாரித்து தருவதாக கூறி  தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பணம் என்பவற்றை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக இருவரை சந்தேகத்தின் பெயரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தங்கலம பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற மூன்று முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் தலங்கம பொலிஸ் நிலையத்தினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து , தேசிய அடையாள அட்டை,மற்றும் 15,000 ரூபாய் பணம் என்பனவும் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்படும் 9 போலி டோக்கன்கள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கைதான சந்தேகநபர்கள் 47 மற்றும் 65 வயதுடைய மாலபே மற்றும் கொழும்பு 9 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது . குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Previous articleஅதிக ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்திருக்கும்இடம் எது தெரியுமா?
Next articleஅரச அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!