சுதந்திர தினத்தில் தேசிய கீதம் பாடும் செலவு மட்டும் ஒரு கோடி!

வரும் 4ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற இருக்கும் சுதந்திரதினத்தில் தேசிய கீதம் பாடுவதற்கு மட்டும் ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அத்தோடு கலாசார நிகழ்வுக்கு ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவும்,தெற்கில் இருந்து வடக்கு வரையான சைக்கிள் சவாரிக்கு 2 கோடி ரூபாவும்.

சுதந்திர தினத்தைக் கண்டு கழிப்பதற்காக தெற்காசிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் அந்நாட்டுத் தலைவர்கள், அதிதிகள் உள்ளிட்டவர்களின் தங்குமிடம் செலவுகள் உள்ளிட்டவற்றிக்காக ஒரு கோடி 90 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதை விட தேசிய கீதம் பாடும் சிறுவர்களின் பயிற்சி, அவர்களுக்குரிய ஆடை அலங்காரம், மற்றும் வாகன ஏற்பாடுகள் உணவுகள் போன்றனவும் இதுக்குள் அடங்குகின்றன .. தேசிய கீதம் பாடுவதற்காகக் கொழும்பு பாடசாலைகளில் இருந்து 115 அழைத்து வர உள்ளனர்.

சுதந்திர நிகழ்வினை ஒட்டி ஆயிரம் ரூபா பணத்தினை வெளியட மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.அதற்காக அவர்கள் இதற்காக அவர்கள் கேட்டிருக்கும் செலவு 2 கோடி 20 இலட்சம் ரூபாவாகும்.சுதந்திர தின கொண்டாட்டத்தை பார்வையிட வருபவர்களுக்கு தாற்காலிகமாகத் தங்குவதற்காக அமைக்கப்படும் கூடாரங்களுக்கான செலவு 4 கோடி ரூபா. அன்றைய தினம் தேசிய கீதம் பாடுவதற்கான செலவு ஒரு கோடி ரூபா.